தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இளையராஜா பட இசை உரிமையைப் பெற்ற லஹரி மியூசிக்! - lahari music

ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'கிளாப்' படத்தின் இசை வெளியீட்டு உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கிளாப்
கிளாப்

By

Published : Jul 28, 2021, 7:50 PM IST

நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'கிளாப்'. தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரித்வி ஆதித்யா இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்டத்தின் இசை வெளியீட்டு உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், "லஹரி மியூசிக் போன்ற பிரபலமான பெரு நிறுவனத்துடன் இணைவது, எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. லஹரி மியூசிக் ஒவ்வொரு ஆல்பத்தையும், பெரும் உழைப்பைச் செலுத்தி, பெரிய அளவில் அதனைப் பிரபலமடையச் செய்து, இசை உலகில் மிக முக்கியமான இடத்தை தக்க வைத்துள்ளனர்.

இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் மந்திர இசை, இசை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உறுதியாய் நம்புகிறோம். 'கிளாப்' திரைப்படத்தில் நடிகர் ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரேநேரத்தில் எடுக்கப்பட்டு, பன்மொழி திரைப்படமாக கிளாப் வெளியாகவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய்?

ABOUT THE AUTHOR

...view details