சிறந்த இயக்குநர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல திறமைகளுக்கு சொந்தக்காரர் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், இந்தி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர், தற்போது திரை உலகில் தனது 20 ஆண்டுகள் திரை பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.
மணி ரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கௌதம் மேனன், பிரபுதேவா, கேஎஸ் ரவிக்குமார், ராஜீவ் குமார், ஜெயராஜ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். இதுதவிர சுமார் 400க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களிலும் ரவிவர்மன் பணியாற்றியுள்ளார்.