தமிழ் திரையுலகில் 1980களில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பி.எஸ் நிவாஸ். இவர் பாரதிராஜாவின் '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', உள்ளிட்ட படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் ஒளிப்பதிவு மட்டும் செய்யாமல் 'கல்லுக்குள் ஈரம்' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி நிவாஸ் - பாரதிராஜா இரங்கல்
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ் மறைவுக்க்கு பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சென்ற நிவாஸ் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்ற சிறந்த ஒளிப்பதிவுக்காக இரண்டு தேசிய விருதுகளை அவர் வென்றுள்ளார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கேரளாவில் நிவாஸ் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "என் திரைப் பயணமான 16 வயதினிலே முதல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி, இந்திய திரை உலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், என் நண்பன் திரு. நிவாஸ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது ஆழ்ந்த இரங்கல்கள்" என பதிவிட்டுள்ளார்.