தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே.02 வெளியானது. இதில் திமுக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கிறது. முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மே 7ஆம் தேதி பொறுப்பேற்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கலைஞர் தந்த பொற்கால ஆட்சியை மீண்டும் தாருங்கள் - கலைப்புலி தானு - தயாரிப்பாளர் தானு ஸ்டாலினுக்கு வாழ்த்து
சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தானு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Kalaippuli
அந்தவகையில், சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தானு ஸ்டாலினுக்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆட்சி அமைக்கவிருக்கும் திரு. ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழக மக்களின் சுடரொளியாக வெளிச்சம் பாய்ச்சி கலைஞரின் பொற்கால தமிழகத்தை மீட்டெடுத்து வருங்கால தலைமுறைக்கான தலைவரென முத்திரை பதிக்க வேண்டுகிறேன்" என பதிவிட்டுளளார்.