நயன்தாரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘ஐரா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கேப்ரில்லா செலஸ். இவர் அதற்கு முன்பு பல குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் சமூக பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு பிரபலமானார்.
குட்டி ஐராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது - நிச்சயதார்த்தம்
ஐரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கேப்ரில்லா செலஸுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.
பெண்களின் மாதவிடாய் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை என பலவற்றுக்கும் நடித்து வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் கேப்ரில்லாவுக்கு தன் நீண்டநாள் காதலர் ஆகாஷ் உடன் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. ஆகாஷ் ஒளிப்பதிவாளராக இருக்கிறார், இருவரும் ஒரே துறையில் பணி செய்வதால் பிரச்னையில்லை என கேப்ரில்லா சொல்கிறார்.
கேப்ரில்லா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், ஆகாஷ் இந்து மதத்தைச் சேர்ந்த மலையாளி. இரு குடும்பத்தாரும் மதம் மறந்து இவர்கள் காதல் கைகூட சம்மதம் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.