தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செப்டம்பர் 24ஆம் தேதி வருகிறாள் ‘சிண்ட்ரெல்லா’ - லக்‌ஷ்மி ராய்

செப்டம்பர் 24ஆம் தேதி லக்‌ஷ்மி ராய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

cindrella-worldwide-from-sep-24
cindrella-worldwide-from-sep-24

By

Published : Sep 18, 2021, 7:09 PM IST

சென்னை: வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் லக்‌ஷ்மி ராய், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ், இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஹாரர் த்ரில்லர் ரக படமாக இது உருவாகியுள்ளது. எஸ். சுப்பையா தயாரிக்கும் இப்படத்துக்கு அஷ்வமித்ரா இசையமைக்க, ராமி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டுள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. லட்சுமி ராய் ஒரு பேப்பரை துரத்திக்கொண்டு செல்கிறார், த்ரில்லான காட்சியுடன் ஸ்னீக் பீக் முடிவடைகிறது. லக்‌ஷ்மி ராய்க்கு இது முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 24ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி

ABOUT THE AUTHOR

...view details