நடிகர் சத்யராஜின் மகனான சிபி சத்யராஜ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம்வந்து-கொண்டிருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்து நடித்துவரும் திரைப்படங்கள் அனைவரையும் ரசிக்கவைக்கின்றது.
2014ஆம் ஆண்டு வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்தத் திரைப்படம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நன்றாக ஓடியது.
சிபிராஜ் தமிழ் சினிமாவுக்கு ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தனது அப்பாவான சத்யராஜுடன் இணைந்து ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் எனத் தொடர் நகைச்சுவைத் திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு நல்ல அறிமுகமானார்.