தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹாங்காங்கில் மீண்டும் வெளியாகும் 'பேட்மேன்' சீரியஸ் படங்கள் - 'பேட்மேன்' சீரியஸ்

கிறிஸ்டோபர் நோலனின் படைப்பான பேட்மேன் சீரியஸ் படங்களை ஹாங்காங்கில் உள்ள திரையரங்கில் குறிப்பிட்ட காலத்திற்கு திரையிட உள்ளதாக வார்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளது.

joker
joker

By

Published : May 19, 2020, 2:48 PM IST

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் சூப்பர் ஹீரோ படமான பேட்மேன் சீரியஸ் படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பும் ரசிகர் பட்டாளமும் உள்ளது.

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கை ஹாங்காங் அரசு எச்சரிக்கையுடன் தளர்த்தி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள திரையரங்குகளை சில நிபந்தனைகளுடன் திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

இதனையடுத்து ஹாங்காங் திரையரங்கில் ஜூன் 4ஆம் தேதி பேட்மேன் பிகின்ஸ் (2005), ஜூன் 11ஆம் தேதி தி டார்க் நைட் (2008), ஜூன் 18ஆம் தேதி தி டார்க் நைட் ரைசஸ் (2012) ஆகிய படங்கள் திரையிடப்படுவதாக வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படங்கள் அங்கியிருக்கும் ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியாக உள்ளது.

அதுமட்டுமல்லாது ஜூலை 17ஆம் தேதி கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டீனெட்' (TENET) திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details