கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், எலிசபெத் டெபிகி, பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'டெனெட்' (TENET). கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ், இப்படத்தை இணைந்துத் தயாரித்துள்ளனர்.
டைம் ரிவர்சல் (time reversal) முறையைப் பயன்படுத்தி மூன்றாம் உலகப்போரை இரண்டு சர்வதேச உளவாளிகள் தடுத்து நிறுத்துவதுதான் இந்தப் படத்தின் கதை. இதன் ட்ரெய்லர் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. கரோனா சூழல் காரணமாக தள்ளிப்போன இதன் வெளியீடு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.