தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’கணவர்னா இப்படி இருக்கணும்’ - மனைவியைக் கொண்டாடும் ’ஜூராசிக் வேர்ல்டு’ நாயகனைப் பார்த்து மகிழும் ரசிகைகள்! - கார்டியன்ஸ் ஆஃப் கேல்க்ஸி

ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் பிராட், தன் இரண்டாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு தன் மனைவிக்கு தெரிவித்துள்ள குறும்பான வாழ்த்துச் செய்தி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

க்ரிஸ் பிராட்
க்ரிஸ் பிராட்

By

Published : Jun 10, 2021, 3:15 PM IST

’ஜூராசிக் வேர்ல்டு’, ’கார்டியன்ஸ் ஆஃப் கேல்க்ஸி’ போன்ற பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் பிராட். குறிப்பாக தனது கட்டுடல் மற்றும் அதிரடி படங்களால் பெருவாரியான பெண் ரசிகைகளை ஈர்த்து தனி ரசிகைகள் பட்டாளத்தையும் இவர் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு தன் மனைவிக்கு அழகான வாழ்த்து செய்தியை வெளியிட்டு பெண்கள் மத்தியில் அன்பான கணவர்களுக்கான அளவுகோலையும் இவர் நிர்ணயித்துள்ளார்.

தன் மனைவி கேத்ரின் ஸ்வாஷ்னேகரிக்கு தனது சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”அன்புள்ள கேத்ரின், இனிய திருமண நாள் வாழ்த்துகள். நீ எனது கால் சுண்டு விரல் நகங்களை வெட்டும்போதும், மருத்துவமனையில் திட்டும்போதும், நான் வேலை பார்க்கும்போது எனக்கு காபி எடுத்து வரும்போதும், உன் அழகிய கூந்தலை படர விடும்போதும், அதிக உணவு சாப்பிட்டு செரிக்க முடியாமல் நீ அவதிப்படும்போதும் என எப்போது உன் முகத்தில் இந்த அழகிய புன்னகை படர்ந்திருக்கும். எனக்காக அனைத்தையும் மாற்றிக் கொண்டதற்கு நன்றி. நான் உன்னை வானளவு காதலிக்கிறேன். நமது இரண்டு ஆண்டு காலத்துக்கு சியர்ஸ்” எனத் தெரிவித்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பதில் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து காதலுடன் கேத்ரினும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட க்ரிஸ் பிராட்-கேத்ரின் ஜோடிக்கு 10 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உண்டு. ரசிகர்களின் ஆதர்ச ஜோடிகளுள் ஒருவரான இவர்கள் அன்பைப் பொழிவதைக் கண்டு மகிழ்ந்துள்ளனர் இவர்களது ரசிகர்கள்.

ABOUT THE AUTHOR

...view details