தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இறுதிகட்ட படப்பிடிப்பில் சியான் 60! - துருவ் விக்ரமின் பிதிய படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள சியான் 60இன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  cini news  cinema news  movie update  vikram latset movie  chiyan 60 shooting  chiyan 60 movie shooting come to an end  dhruv vikram latest movie  சியான் 60 படப்பிடிப்பு  சியான் 60 இறுதிக்கட்ட படப்பிடிப்பு  chiyan 60  துருவ் விக்ரமின் பிதிய படம்  சியான் 60
சியான் 60

By

Published : Aug 1, 2021, 5:53 PM IST

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துவருகின்றனர். இவர்கள் நடிக்கும் இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை. இதனால் இப்படம் 'சியான் 60' என அழைக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் படத்தில் இருவர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இதில் ஒருவராக தற்போது வாணி போஜனும், மற்றொரு கதாநாயகியாக சிம்ரனும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

முடிவுக்கு வந்த படப்பிடிப்பு

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்துக்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

அந்த வகையில் டார்ஜிலிங்கில் நடந்துகொண்டிருக்கும் இப்படப்பிடிப்பு, இன்னும் பத்து நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிவுபெறும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நண்பர்கள் தினம்: உயிரை கொடுத்த கென் டேலி!

ABOUT THE AUTHOR

...view details