கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், துருவ், வாணி போஜன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘சியான் 60’. இது ஒரு மாஸ் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இன்று காஞ்சிபுரத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்தப் படத்துக்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, கோவா, டார்ஜிலிங் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.