தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் - ஆச்சார்யா படப்பிடிப்பு

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

Chiranjeevi
Chiranjeevi

By

Published : Nov 5, 2020, 4:09 PM IST

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில்தான் படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில், ஆச்சார்யா படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் அறிவிக்காமல் இருந்தனர்.

தற்போது இப்படத்தில் நடிக்க ஒப்பந்த செய்யப்பட்ட நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கிடைத்துவிட்டதால் நவம்பர் 9ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details