தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது கொரட்லா சிவா இயக்கும் ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 152ஆவது படமாகும். இப்படத்தை அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார்.
வீட்டு நேரம்...அம்மாவுக்கான நேரம் செல்ஃபி எடுத்து அனுப்புங்கள் - சிரஞ்சீவியின் ட்வீட் - கரோனா ட்வீட்
இந்த நேரத்தில் உங்கள் பெற்றோர்களையும் பெரியவர்களையும் கவனித்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்திய நடிகர் சிரஞ்சீவி, தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள 21 நாள் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்தியுள்ளார். இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறவேண்டாம் என பிரபலங்கள் தங்களது சமூகவலைதள பக்கத்தில் கூறி வருகின்றனர்.
இதையடுத்து, சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், வீட்டு நேரம்... அம்மாவுக்கான நேரம்!! இந்த நேரத்தில் நம் பெற்றோர்களையும் பெரியவர்களையும் கவனித்துக்கொள்வோம். உங்கள் பெற்றோர், பெரியவர்களுடன் நீங்கள் இருக்கும் செல்ஃபிக்களை எனக்கு அனுப்புங்கள் என்று சிரஞ்சீவி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.