டோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மலையாள வெர்சன் ப்ரொமோஷனுக்காக சிரஞ்சீவி கொச்சியில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய நடிகர் மற்றும் லூசிபர் இயக்குநர் பிரித்விராஜ், ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் என்னை சிரஞ்சீவி நடிக்க அழைத்திருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதை நினைத்து இப்போது வருந்துகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ‘நான் இயக்கிய ‘லூசிபர்’ படத்தின் உரிமையை சிரஞ்சீவிதான் பெற்றிருக்கிறார். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, அந்த படத்தை யார் இயக்கினாலும் சரி, ’லூசிபர்’ கதாபாத்திரத்தில் நீங்க எப்படி இருப்பிங்கனு பார்க்க ஆசைப்படுறேன்’ என கூறினார்.