தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கரோனா இல்லை!

ஆர்பிசிஆர் கிட் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், வைரஸ் தொற்று இருப்பதாக தவறாக காட்டபட்டது. தற்போது மூன்று மாறுபட்ட பரிசோதனைகள் மேற்கொண்டதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

Chiranjeevi tested Covid negative
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி

By

Published : Nov 13, 2020, 9:42 AM IST

ஹைதராபாத்: தனக்குகரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும், முன்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தவறுதலாக கரோனா இருப்பதாக காட்டப்பட்டதாகவும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவர் குழுவினர் மூன்று மாறுபட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதில் எனக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக ஆர்பிசிஆர் கிட் மூலம் எடுக்கப்பட்ட சோதனையின்போது தொற்று இருப்பதாக தவறுதலாக காட்டப்பட்டது.

இந்த நேரத்தில் என் மீது அக்கறை கொண்டு, அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன், கரோனா பரிசோதனை முடிவின் அறிக்கையும் இணைத்துள்ளார். அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி சிரஞ்சீவிக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் தன்னைத் தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சிரஞ்சீவி கரோனாவிலிருந்து குணமடைய வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட நிலையில், தற்போது தனக்கு கரோனா இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஈஸ்வரன் பட விவகாரம் - சிம்புவை நேரில் சந்தித்து சம்மன் கொடுத்த வனத்துறையினர்

ABOUT THE AUTHOR

...view details