தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சிரஞ்சீவி. இவர் தற்போது கொரட்லா சிவா இயக்கத்தில் உருவான 'ஆச்சார்யா' படத்தில் நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மே 13ஆம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம், தற்போது கரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக புதிய வெளியீட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலக தொழிலாளர்கள் கரோனா நெருக்கடியில் வேலையிழந்தபோது சிரஞ்சீவி, அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து தொழிலாளர்களுக்கும் நலிவடைந்த கலைஞர்களுக்கும் தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார்.