தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு! - சிரஞ்சீவியின் ஆச்சார்யா டீசர்
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'ஆச்சார்யா' படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
![சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு! Chiranjeevi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10395556-837-10395556-1611730259023.jpg)
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில்தான் படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனாலும் இப்படம் குறித்தான எந்த அப்டேட்களும் வரததால் ரசிகர்கள் படக்குழுவினரிடம் சமூகவலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தனர்.
அதுமட்டுமல்லாது சிரஞ்சீவியும் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், கொரட்லா சிவாவிடம் ஆச்சார்யா டீசர் எப்போது வரும் என மீம்ஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு கொரட்லா சிவா இன்று காலை அறிவிப்பேன் என கூறினார். அதன்படி, ஆச்சார்யா டீசர் ஜனவரி 29ஆம் தேதி வெளியாகும் என கொரட்லா சிவா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.