ஹைதராபாத்: ஒரே நாளில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திய ஆந்திர அரசை நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார்.
ஆந்திர அரசு ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆந்திர பிரதேச சுகாதாரக் குழு ஒரே நாளில் 13. 72 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் முயற்சிகள் கோவிட் கொடுமையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இன்னும் நீங்கள் பயணப்பட வேண்டியிருக்கிறது. அதற்கான சக்தி உங்களுக்கு கிடைக்கட்டும். வாழ்த்துகள் ஜெகன் மோகன் ரெட்டி, உத்வேகமளிக்கும் தலைமைப் பண்பு என குறிப்பிட்டுள்ளார்.
கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்தே சிரஞ்சீவி அனைவரையும் தடுப்பூசி போட வலியுறுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். தெலுங்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவர் ஆக்சிஜன் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
Chiranjeevi Konidela praises andhra government
இதையும் படிங்க:ஓடிடி வதந்தி: மீம் ஷேர் செய்து கலாய்த்த விஜய் தேவரகொண்டா