சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
'சைரா' சிரஞ்சீவி தமிழிசையிடம் வைத்த வேண்டுகோள்! - சைரா நரசிம்ம ரெட்டி
நடிகர் சிரஞ்சீவி தெலங்கானா ஆளுநர் தமிழசையை சந்தித்து வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
Chiranjeevi
இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழசையை சிரஞ்சீவிசந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் ஆளுநருக்கு தனது தசரா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது தனது படமான சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்றும் அப்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் வேண்டுகோளை ஏற்ற தமிழிசை, விரைவில் திரைப்படத்தை பார்க்க உள்ளதாக சிரஞ்சீவியிடம் உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'அப்டேட் விடு அர்ச்சு' ட்விட்டரில் வெறித்தன ட்ரெண்ட்!