ஸ்ரீகாந்த அடாலா இயக்கத்தில் வெங்கடேஷ், ப்ரியாமணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘நாரப்பா’. வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இத்திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெங்கடேஷ், ப்ரியாமணி ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெங்கடேஷை சிரஞ்சீவி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக வெங்கடேஷ் பகிர்ந்த வீடியோவில், நான் ‘நாரப்பா’ திரைப்படத்தை பார்த்தேன். எந்த இடத்திலும் எனக்கு வெங்கடேஷ் தெரியவில்லை; நாரப்பாதான் தெரிந்தார். என்ன ஒரு ஆக்டிங்; உங்கள் திரைப்பயணத்தில் நாரப்பா முக்கியமான படமாக இருக்கும்.