தமிழ்நாட்டு மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் டிவி சீரியல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. டிவி சீரியல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு அமர்ந்து காண்கின்றனர். சக்திமான் சீரியல் பார்த்து சக்திமான் காப்பாற்றுவார் என சிறுவர்கள், மாடியில் இருந்து குதித்து இறந்த செய்தி எல்லாம் உண்டு. டிவி சீரியல்கள் நம் மீது அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்நிலையில், சன் டிவி சேனலில் மாலை ஒளிபரப்பாகும் நாடகம் ஒன்றில், பெண் ஒருவர் தன் சொந்த தங்கையை பழிவாங்க, ரவுடிகளை விட்டு பாலியல் வன்புணர்வு செய்யச் சொல்வது போல காட்சி ஒளிபரப்பாகியுள்ளது. இது குறித்து ராகுல் என்பவர் சின்மயிக்கு ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார்.
சன் டிவி சீரியல் சர்ச்சைக்கு சின்மயி சொன்ன தீர்வு? - metoo
ஒரு தொலைக்காட்சி தொடரில் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ய சொல்லும் காட்சி இடம்பெற்றதற்கு சின்மயி ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார்.
அந்த ட்விட்டை படித்த சின்மயி, "இதுபோன்ற காட்சிகளை நீங்கள் எந்த மொழி சீரியல்களில் பார்த்தாலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவியுங்கள். கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யச் சொல்வது பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை" என அமைச்சர் அருண் ஜெட்லி பெயரையும் சேர்த்து பதிலளித்துள்ளார்.
#Metoo இயக்கத்தின் தமிழக முகமாக மாறிப்போனவர் சின்மயி, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் அதிகரித்துவரும் வேளையில், தமிழ் சீரியல்கள் இன்னும் அப்டேட் ஆகாமல் இருக்கிறது. பெண்ணை பழிவாங்க பாலியல் வன்புணர்வு செய் என கற்றுத்தரும் விதமாக காட்சிகள் அமைப்பதை எப்போது நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை.