தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எனக்கு தடை; அவருக்கு பார்ட்டி இது தான் உங்க நீதி -  சின்மயி ஆதங்கம்! - கமல் ரஜினியுடன் வைரமுத்து

”குற்றம் சாட்டப்பட்டவர் பார்ட்டி கொண்டாடுகிறார்; ஆனால் புகார் அளித்தவருக்குத் தடை. இதுதான் தமிழ்நாடு திரைப்படத் துறையின் பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி”

chinmayi

By

Published : Nov 12, 2019, 12:06 AM IST

உலகநாயகன் கமல் ஹாசன் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக நவம்பர் 7, 8, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இதையடுத்து தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் புதிய அலுவலகத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் நிறுவியுள்ளார். இந்தக் கட்டடத்தை திறப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், நடிகர் நாசர், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கட்டட முன் பகுதியில் மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலையை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

சின்மயி இன்ஸ்டாகிராம் போஸ்ட்

அப்போது ரஜினி, கமலுடன் வைரமுத்து கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்தப் புகைப்படத்தை பார்த்த சின்மயி, தற்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ”பாலியல் புகார் சுமத்தப்பட்ட ஆண்களின் வாழ்க்கையை ’மீடூ’ கெடுத்துவிட்டது (நான் இங்கு வைரமுத்துவை பற்றிச் சொல்கிறேன்). பாலியல் வன்கொடுமை புகாருக்கு ஆளான ஆணின் வாழ்க்கையும் கெரியரும் அழிந்துவடும் வெளியில் முகம் காட்ட முடியாது என்பார்கள். ஆனால் இந்தாண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐஏஎஸ் பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், தொழில் நிகழ்வுகளில் வைரமுத்து முதன்மை விருந்தினராக கலந்து கொண்டபோதிலும் அவருக்கு எதுவும் நடக்கவில்லை.

பாதிக்கப்பட்ட நான் உடனடியாக தடை செய்யப்பட்டேன். குற்றம் சாட்டப்பட்டவர் பார்ட்டி கொண்டாடுகிறார்; புகார் அளித்தவருக்குத் தடை. இதுதான் தமிழ்நாடு திரைப்படத் துறையின் பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details