தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வித்தியாசமான கதையுடன் வரும் 'சிதம்பரம் ரயில்வே கேட்'! - மாஸ்டர் மகேந்திரன்

இப்படத்தை தணிக்கைக்குழு பாராட்டி யூ சான்றிதழ் அளித்துள்ளது. வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். லொள்ளு சபா மனோகர், பிக்பாஸ் டேனியல் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Chidambaram railway gate
Chidambaram railway gate

By

Published : Jan 12, 2021, 3:19 PM IST

சென்னை: வித்தியாசமான கதைக்களத்துடன் திரைக்கு வர காத்திருக்கிறது சிதம்பரம் ரயில்வே கேட் திரைப்படம்.

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.எம். இப்ராஹிம் வழங்கும் திரைப்படம் ‘சிதம்பரம் ரயில்வே கேட்’. இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார். கதாநாயகிகளாக நீரஜா, காயத்ரி நடித்துள்ளனர்.இப்படத்தை தணிக்கைக்குழு பாராட்டி யூ சான்றிதழ் அளித்துள்ளது. வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். லொள்ளு சபா மனோகர், பிக்பாஸ் டேனியல் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வழக்கமான தமிழ் சினிமா போல் இல்லாமல், வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு ஒளிப்பதிவை R. வேல் கையாண்டுள்ளார். எடிட்டிங் சுரேஷ் அர்ஸ், கார்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இம்மாதம் 28ஆம் தேதி திரைக்கு வருமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details