சிவபாலன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்திருக்கும் படம் சிதம்பரம் ரயில்வே கேட்.
இந்தப் படத்தில் நாயாகிகளாக நடிகைகள் நீரஜா, காயத்திரி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் 'லொள்ளு சபா' மனோகர், 'பிக்பாஸ்' டேனியல், சூப்பர் சுப்புராயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.எம் இப்ராஹிம் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்ட விஜய்சேதுபதி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டியிருந்தார். இந்நிலையில், இன்று வெளியாகியிருக்கும் சிதம்பரம் ரயில்வே கேட் படத்தை பார்த்து சிவகார்த்திகேயன், பாக்யராஜ் போன்றோர் பாராட்டியுள்ளனர்.