இந்தப் படத்தில் தீபிகா படுகோனே நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் இருக்கிறார். தீபிகா படுகோனேயுடன் விக்ராந்த் மாஷி, மேக்னா குல்சார் ஆகியோர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஆலியா பட் நடித்த 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் .
படம் குறித்து மேக்னா குல்சார் பேசுகையில், "கதைப்படி தீபிகா படுகோனே 2005ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு தெருவில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படுகிறார். அவர் மீது ஆசிட் வீசியவர் தன்னைவிட இரண்டு மடங்கு வயதில் மூத்தவர். தீபிகா அவரின் காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் நிகழ்கிறது.
அதன் பிறகு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் தீபிகா தனக்கு நடந்த இந்த செயல் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்ககூடாது என எண்ணி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றிபெறுகிறார் . மேலும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல பிரசாரங்களில் ஈடுபடுகிறார்.