தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இந்த ஃபைல முதல்ல எடுங்க' - முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த சேரன் - கனமழை

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், அதுதொடர்பாக இயக்குநர் சேரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சேரன்
சேரன்

By

Published : Nov 9, 2021, 7:42 PM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகத் தீவிர மழைப்பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

சாலை எங்கும் நீர் தேங்கி நிற்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகரும், இயக்குநருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மழைப் பாதிப்பு வந்தால் நீர் தேங்காமல் வெளியேறத் திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்.

இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா. இந்த ஃபைல முதல்ல எடுங்க மு.க.ஸ்டாலின் அய்யா...என்று தணியும் இந்த..." எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அஜித், ரஜினியைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா படத்தில் யார்?

ABOUT THE AUTHOR

...view details