தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நிலைமை சீராகும் வரை வரிச் சலுகைகளை நீக்க வேண்டும் - இயக்குநர் சேரன் வேண்டுகோள் - படப்பிடிப்புக்கு அனுமதி

சென்னை: நிலைமை சீராகும் வரை படப்பிடிப்பு அனுமதிக்கான செலவு வரிச் சலுகைகளை முற்றிலும் நீக்க வேண்டும் என இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேரன்
சேரன்

By

Published : Aug 24, 2020, 1:35 PM IST

கரோனாவால் ஏற்பட்டுள்ள பொது ஊரடங்கால் திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெறாததால், ஏராளமான திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைத் துறையில் பல்வேறு சங்கங்களில் இருந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இந்த வேண்டுகோளை அடுத்து திரைப்பட படப்பிடிப்பு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து, திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இயக்குநரும் நடிகருமான சேரன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சேரன், "திரைத்துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதையும், 70% சிறு படத்தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு படப்பிடிப்பின் அனுமதிக்கான செலவுகளையும், வரிச்சலுகைகளையும் நிலைமை சீராகும் வரை முற்றிலுமாக நீக்கித்தருமாறு வேண்டுகிறேன்" என தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கும் டேக் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details