பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்ற படத்தில் நடித்துவருகிறார். கௌதம் கார்த்திக் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் வீடு ஒன்று முக்கிய பங்கு வகுக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பில், சேரன் கால் இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இவ்விபத்தில் அவருக்கு எட்டு தையல்கள் போடப்பட்டன.