இயக்குநரும் நடிகருமான சேரன் யூடியூப்பில் வால் போஸ்டர் நியூஸ் என்னும் புதிய சேனலை ஆரம்பித்துள்ளார்.
வீட்டில் இருக்கும் சேரன் ஆரம்பித்த புதிய யூடியூப் சேனல் - இயக்குநர் சேரனின் புதிய யூடியூப் சேனல்
"பல்வேறு இளைஞர்களின் திறமையை வெளியே கொண்டுவருவதற்காக... முதலில் தினமும் செய்திகளோடு விரைவில் துவங்குகிறோம்.. தொடர்ந்து பன்முகத்தன்மையோடு வளரும்... ஆதரவை கொடுத்து வளர்க்கவும்"
உலகப்பெருந்தொற்று நோயான கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக இந்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் திரை பிரபலங்கள் வீட்டில் இருந்து தங்களது அன்றாட செயல்களை வீடியோ, புகைப்படங்களால் பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இயக்குநரும் நடிகருமான சேரன் இந்த ஓய்வு நேரத்தில் யூடியூப்பில் புதிய சேனலை ஆரம்பித்துள்ளார். வால் போஸ்டர் நியூஸ் (WALL POSTER NEWS) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேனல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நண்பர்களே புதிய முயற்சியாக wall Poster you tube channel ஒன்று துவங்கியிருக்கிறோம்.. பல்வேறு இளைஞர்களின் திறமையை வெளியே கொண்டுவருவதற்காக... முதலில் தினமும் செய்திகளோடு விரைவில் துவங்குகிறோம்.. தொடர்ந்து பன்முகத்தன்மையோடு வளரும்... ஆதரவை கொடுத்து வளர்க்கவும்" என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த சேனலுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் ஆதரவளித்து வருகின்றனர்.