தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ! - பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்

சென்னை : டப்பிங் சங்கத்திற்கென்று புதிதாக அமைக்கப்பட உள்ள டப்பிங் ஸ்டுடியோவிற்கு, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெயர் சூட்டப்படும் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

இந்திய திரைப்பட டப்பிங் யூனியன்
இந்திய திரைப்பட டப்பிங் யூனியன்

By

Published : Sep 30, 2020, 4:42 PM IST

சென்னை, விஜயராகவபுரத்திலுள்ள இந்தியத் திரைப்பட டப்பிங் யூனியன் சங்கத்தில் இன்று (செப்.30) நடிகர் ராதாரவி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் சங்க உறுப்பினர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் டப்பிங் யூனியனுக்கு என்று தனியாக டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, “டப்பிங் சங்கத்திற்கென்று புதிதாக அமைய உள்ள டப்பிங் ஸ்டுடியோவிற்கு, டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெயர் சூட்டப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...அரியர் தேர்வுகள் ரத்து: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details