சென்னை: அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' படத்துக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல்செய்த மனுவில், “எங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை, ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், நான்கு கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.
இதில், இரண்டு கோடியே 85 லட்சம் ரூபாயை கொடுத்த ராக்ஃபோர்ட் நிறுவனம், மீதமுள்ள இரண்டு கோடி ரூபாயை வழங்கவில்லை. அதற்குப் பதிலாக விநியோக உரிமையைத் திருப்பித் தருவதாகவும், படத்தின் லாபத்தில் 40 விழுக்காட்டைத் தரும்படியும், இழப்பு ஏற்பாட்டால் மீதமுள்ள தொகையை திரும்பித் தருவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.