தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் ஷங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

இந்தியன் 2 திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஷங்கர்-  சென்னை உயர்நீதிமன்றம்
ஷங்கர்- சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Jul 7, 2021, 4:05 PM IST

நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படம் தயாராகிவருகிறது. இத்திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க, ஷங்கருக்குத் தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார். இதனையடுத்து இதை எதிர்த்து லைகா நிறுவனம் தரப்பில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 7) தலைமை நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்று கூறி மீண்டும் லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:முதலமைச்சரை சந்திக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details