தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’தலைவி படத்திற்கு தடை விதிக்க முடியாது’ - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Apr 16, 2021, 3:50 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைவி’ ஏ.எல்.விஜய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதேபோல், இந்தியில் ’ஜெயா’ என்ற பெயரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

மேலும், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ’குயின்’ என்ற இணையதளத் தொடரை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார். இவ்வாறு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் உறவினரான தீபா, முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், இந்தப் படங்களில் தங்களுடைய குடும்பத்தினர் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தீபா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வு இன்று (ஏப்ரல்.16) விசாரித்தது. அப்போது, ”தலைவி என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே தலைவி படத்திற்கு தீபா ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கதை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதாவை நல்ல முறையிலேயே சித்தரித்து உள்ளோம். எதிர்கால சந்ததியினர் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் வகையிலேயே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது” என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

தொடர்ந்து, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”படத்தை வெளியிடுவதற்கு முன்பு தங்களுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் விஜய் தரப்பு வழக்கறிஞர், ”படத்தை சென்சார் போர்டு பார்த்து தணிக்கை செய்யும்” என்று தெரிவித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில், தலைவி, குயின், ஜெயா போன்ற படங்கள் வெளியாகத் தடை விதிக்க முடியாது எனக் கூறி தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details