பிகில் படத்தின் ட்ரெய்லரில் சென்னை புட்ஃபால் கிளப் வீரர்கள் வருவதையடுத்து அவர்கள்மகிழ்ச்சியில் திளைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ட்ரெய்லர் வெளியான சில மணிநேரங்களிலேயே அதை உலகளவில் ட்ரெண்ட் செய்தனர். மேலும் ரசிகர்கள் இப்படி கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்களும் ட்ரெய்லரை கண்டு படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சென்னை சிட்டி புட்ஃபால் விளையாட்டு வீரர்கள் பிகில் படத்தில் விஜய்யுடன் விளையாடும் சீன்களை ட்ரெய்லரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தாங்கள் தோன்றும் காட்சிகளை குறிப்பிட்டு ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். அதில் ஒரு வீரர் டேய் நான் முன்னாடி நிக்கிறேன்டா என்றும் மற்றெருவார் தம்பி நான் ஒரு சீன்ல வர்றேன் என்று கூறியபடி மகிழ்ச்சியில் குதிக்கிறார்.
பிகில் படத்தில் ஃபுட்ஃபால் வீரர்களாக துணை நடிகர்கள் மட்டுமின்றி உண்மையான வீரர்களும் நடித்துள்ளனர். இந்த வீடியோ வெளியானதையடுத்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக பாகிர்ந்தும் லைக் செய்தும் வருகின்றனர்.
இதையும் வாசிங்க: 'பிகில் ட்ரெய்லரை இப்பவே ட்ரெண்ட் பண்றோம்' - விஜய் ரசிகர்கள் ஆதங்கம்!