'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
10 லட்சம் லைக்குகளை அள்ளிய சிவகார்த்திகேயனின் பாடல்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’டாக்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா' பாடல் யூ-ட்யூப்பில் 1 மில்லியன் (10 லட்சம்) லைக்குகளைப் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன்
இதற்கிடையில் ’டாக்டர்’ திரைப்படத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ’செல்லம்மா' பாடல் தற்போது யூ-ட்யூப் தளத்தில் ஒரு மில்லியன் லைக்குகள் பெற்று சாதனை படைத்துவருகிறது. இந்தப் படம் வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பதிவுத் திருமணம் செய்துகொண்டது ஏன்? சித்ராவின் கணவரிடம் தொடர் விசாரணை