தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பல வருடங்களுக்கு பின் மன்மதராசா பாடலுக்கு நடனமாடிய சாயா சிங் - சாயாசிங்கின் படங்கள்

நடிகை சாயா சிங், நடன மாஸ்டர் சிவசங்கருடன் 'மன்மதராசா' பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்துள்ளார்.

chaya singh
chaya singh

By

Published : May 20, 2020, 4:57 PM IST

இயக்குநர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் தனுஷ், சாயா சிங், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான படம் 'திருடா திருடி'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மன்மதராசா' பாடல் இப்போது வரை ரசிகர்களை கவர்ந்துவருகிறது. இந்தப் பாடலுக்கு படத்தின் வெற்றியில் முக்கிய பங்குண்டு என கூறலாம் .

தினாவின் ஃபாஸ்ட் பீட் இசை, அதற்கேற்றவாரு தனுஷ், சாயா சிங்கின் புயல் வேக நடனம் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்தது. இதன் பின் சாயா சிங் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனிக்கும் நடிகைகளில் ஒருவர் ஆனார்.

2012 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் (தெய்வமகள்) நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி', விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்', அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது தொலைக்காட்சி தொடரிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சாயா சிங், ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக நடன மாஸ்டர் சிவசங்கருடன் 'மன்மதராசா' பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அதில், என்னுடைய பிறந்தநாள் ட்ரீட்டாக உங்களுக்கு பிடித்த 'திருடா திருடி' பாடல். ஒரு வருடத்திற்கு முன் சிவசங்கர் மாஸ்டரை சந்தித்தபோது எடுத்த வீடியோ என்றும் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'எனக்கு சேலஞ்ச் ரோல் பண்ண ஆசை' - நடிகை சாயா சிங்!

ABOUT THE AUTHOR

...view details