தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலிமை படத்தில் திடீர் மாற்றம் செய்த இயக்குநர் - change in valimai movie scenes

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

change in valimai movie scenes made by H Vinoth
change in valimai movie scenes made by H Vinoth

By

Published : Feb 5, 2021, 3:13 PM IST

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் 'வலிமை'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
கரோனா பயத்தில் படத்தில் நடிக்க ஒப்பந்தமான 60 வயதுக்கும் மேற்பட்ட பல நடிகர்கள் படப்பிடிப்புக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்புக்கு வரக் கூடியவர்களாகப் பார்த்து தேர்வுசெய்து அவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஹெச்.வினோத்.
இதனால் சில நாள்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால் அந்த ஃபாரீன் காட்சியைக் கூட முடிந்தால் எடுப்போம்.. வழி இல்லை எனில் அது சம்பந்தப்பட்ட காட்சியையே நீக்கிவிடலாம் என்ற முடிவுக்கு இயக்குநர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details