தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஷூட்டிங்கில் கயல் சீரியல் நாயகிக்கு காயம்.... கவலையில் ரசிகர்கள் - சைத்ரா ரெட்டிக்கு விபத்து

கயல் சிரீயல் நாயகி சைத்ரா ரெட்டிக்கு விபத்து நடந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சைத்ரா ரெட்டி
சைத்ரா ரெட்டி

By

Published : Nov 26, 2021, 1:01 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி.

இதனையடுத்து 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பின்னர் 'கயல்' சீரியலில் ராஜா ராணி மூலம் பிரபலமான சஞ்சீவ்-விற்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சைத்ரா ரெட்டி 'கயல்' ஷூட்டிங்கில் பங்கேற்றபோது அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. வண்டியிலிருந்து கீழே விழுந்ததால் அவருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டகிராமில் "கயல் ஷூட்டிங்கில் எனக்குக் காயமடைந்துவிட்டது. வெஸ்பாவிலிருந்து கீழே விழுந்துவிட்டேன்.

சைத்ரா ரெட்டி வெளியிட்ட பதிவு

விபத்து நடந்து மூன்று நாள்கள் ஆகிவிட்டது. தற்போது நன்றாக இருக்கிறேன். என்னை விசாரித்த அனைவருக்கும் நன்றி. Much love" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அச்சச்சோ... யாஷிகாவைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்

ABOUT THE AUTHOR

...view details