கரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், திரையரங்குகளை திறக்க பல்வேறு மாநிலங்களிலும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வருகின்ற 8ஆம் தேதி இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், புதுடெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒரு ஆண்டிற்கு 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிடும் தென்னிந்திய சினிமாவை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை கண்டித்து தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் டி. ராஜேந்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தென்னிந்திய திரைப்படத்துறையைச் சேர்ந்த சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவை புறக்கணித்து இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.