தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகைகள்! - Latest cinema news

இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் வழக்கு சுமத்தப்பட்ட நிலையில், அது பொய்யானது என்று பாலிவுட் நடிகைகள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

By

Published : Sep 21, 2020, 3:58 AM IST

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை பாயல் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இதையடுத்து இயக்குநர் அனுராக் காஷ்யப் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் அல்ல என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகை சுர்வீன் சாவ்லா, தனது ட்விட்டர் பக்கத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " என் நண்பருக்கு நான் எப்போதும் துணையாக நிற்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நடிகை டிஸ்கா சோப்ரா, " என் நண்பர் அனுராக் காஷ்யப் மிகவும் நேர்மை, மற்றும் ஒழுக்கமானவர். என் நண்பர் பக்கம் நான் நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details