தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபலங்கள் பாராட்டும் 'மேதகு'! - மேதகு திரைப்படம்

தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக் கால வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'மேதகு' படத்தின் சிறப்புகாட்சியை பார்த்த திரைப்பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

g
g

By

Published : Jun 25, 2021, 7:26 PM IST

தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக் கால வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘மேதகு’ திரைப்படம், இன்று (ஜூன் 25) BSvalue என்னும் ஓடிடி தளத்தில் வெளியானது.

மேதகு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

கிட்டு இயக்கத்தில் குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, விஜய் ஆனந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் மேதகு. தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக் கால வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் ஆயுதமேந்திய போராளியாக மாறியது குறித்து இப்படம் விவரிக்கிறது. இதற்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளியாகவிருந்த இப்படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

மேதகு படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த நடிகர்கள் சத்யராஜ், சசிகுமார், இயக்குநர்கள் வெற்றிமாறன் , அமீர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்க சொல்லும் படமாக மேதகு படம் உருவாகி இருக்கிறது. ஈழத்தின் மீதான உலகளாவிய நற்பார்வை பெருக இந்தப்படம் மகத்தான வெற்றிபெற வேண்டும். வெல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழீழத்தேசத்தைப் படைத்திட தலைவர் பிறந்த திருநாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்!'

ABOUT THE AUTHOR

...view details