தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தெலங்கானா என்கவுண்டர்: பிரபலங்கள் கருத்து! - கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை

தெலங்கானா என்கவுண்டர் நடவடிக்கை நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Celebrities Reaction on the telangana encounter
Celebrities Reaction on the telangana encounter

By

Published : Dec 6, 2019, 3:20 PM IST

Updated : Dec 7, 2019, 9:11 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திஷா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் நேற்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

நாட்டு மக்களின் கவனத்தைப் பெற்றுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து, அதனைக் கொண்டாடி வருகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தண்டிப்பதை விட சிறந்த தீர்வு கிடையாது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தாவின் ட்வீட் பதிவில், 'பயமே ஒரு சிறந்த தீர்வு, சில நேரங்களில் ஒரே தீர்வு' என குறிப்பிட்டுள்ளார்.

'நீதி வழங்கப்பட்டது! இப்போது, ​​இளைப்பாருங்கள் திஷா' என தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் பதிவிட்டுள்ளார்.

'உண்மை சுடும்' என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள் கருத்து

இதே போன்று விவேக், பிரனிதா, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், நானி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் ட்வீட் செய்துள்ளனர்.

இதையும் படிங்க...

ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்திய கங்கனா

Last Updated : Dec 7, 2019, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details