நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23) தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். 'நேருக்கு நேர்' படம் தொடங்கி இன்று 'எதற்கும் துணிந்தவன்'ஆக நிமிர்ந்துநிற்கிறார். பொதுவாக சூர்யா படம் வெளியாகின்றது என்றாலே அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் அதனைத் திருவிழாபோல் கொண்டாடுவார்கள்.
அப்படி இருக்கும் சூழலில் அவரது இந்தாண்டு பிறந்தநாளை சும்மா விடுவார்கள். இன்று காலை முதலே பட்டாசு வெடிப்பது, இனிப்புகள் வழங்குவது, பேனர் அடிப்பது என வெகுவிமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.