தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து - இயக்குநர் ஷங்கரிடம் மூன்று மணி நேரம் விசாரணை!

சென்னை: மூன்று பேரை பலிவாங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.

By

Published : Feb 27, 2020, 4:43 PM IST

shankar
shankar

பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி, கமல் ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிகழ்வு தொடர்பாக நசரத்பேட்டை காவல் துறையினர், லைகா நிறுவனம் மற்றும் கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜன், பின்னர் பிணையில் வெளிவந்தார். இந்த விபத்து தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரிக்க காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர், கிரேன் உரிமையாளர் உள்ளிட்டோரை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் திட்டமிட்டனர். அதனடிப்படையில் கடந்த 25ஆம் தேதி அரங்கு அமைத்த மேலாளர், கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர் உட்பட ஆறு பேரை துணை ஆணையர் நாகஜோதி, விபத்து குறித்து தனித்தனியாக சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து - இயக்குநர் ஷங்கரிடம் மூன்று மணி நேரம் விசாரணை!

இந்நிலையில் விபத்து குறித்த விசாரணைக்காக இந்தியன் 2 படத்தின் இயக்குநர் ஷங்கர், இன்று காலை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். விபத்து தொடர்பாக துணை ஆணையர் நாகஜோதி, சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் எவ்வளவு நாட்களில் செட் அமைக்கப்பட்டது, செட் அமைக்க எத்தனை பேர் பயன்படுத்தப்பட்டனர் என்பன போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:பார்க்க வேடிக்கையா இருக்கும் இதை செய்ய அதிக கவனம் தேவை: 'கோமாளி' நடிகை

ABOUT THE AUTHOR

...view details