ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூர்யவன்ஷி'. இப்படத்தின் படபிடிப்பு பாங்காக்கில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
பறந்து பறந்து துரத்தும் 'பக்ஷிராஜன்' அக்ஷய்குமார் - சூர்யவன்ஷி
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ஸ்டண்ட் காட்சியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பைக்கில் செல்லும் நபரை அக்ஷய்குமார் ஹெலிகாப்டரில் தொங்கியபடி அசால்ட்டாக துரத்துவது போன்று ஆபத்தான ஸ்டண்ட் காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது சாதாரணமாக ஹெலிகாப்டரில் தொங்கியபடி 'சூர்யவன்ஷி' செட்டில் மற்றொரு நாள். இதை யாரும் முயற்சிக்க வேண்டாம். இது அத்தனையும் கைத்தேர்ந்த ஸ்டண்ட் கலைஞர்களின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டது’ என ட்வீட் செய்துள்ளார்.
‘சூர்யவன்ஷி’ படத்தை தவிர, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காஞ்சனா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘லக்ஷ்மி பாம்ப்’ படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.