தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மத அவமதிப்பு : மகேஷ் பட், ஆலியா பட் மீது வழக்கு! - மகேஷ் பட்

இந்து மதத்தை அவமதிப்பதாகக் கூறி இயக்குநர் மகேஷ் பட், அவரது மகள் ஆலியா பட் மீது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மகேஷ் பட்
மகேஷ் பட்

By

Published : Jul 3, 2020, 5:32 PM IST

பாலிவுட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பட் இயக்கும் திரைப்படம் ’சடக் 2’. இத்திரைப்படம் 1991ஆம் ஆண்டு வெளியான சடக் படத்தின் இரண்டாவது பாகம் ஆகும்.

இதில், மகேஷ் பட்டின் மகள்கள் ஆலியா பட், பூஜா பட் இருவரும் நடித்துள்ளனர். மகேஷ் பட்டின் சகோதரர் முகேஷ் பட் தயாரித்துள்ள இப்படத்தில் ஆலியாவுக்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளார் .

இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் போஸ்டர் ஒன்று வெளியானது. ஒரு நீண்ட பாதையில், கயிலை மலையுடன் வெளியான இந்த போஸ்டரில் விரைவில் உங்கள் வீடு தேடி வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த சோனு குமார் என்ற வழக்கறிஞர், இயக்குநர் மகேஷ் பட் அவரது மகள் ஆலியா பட் ஆகியோர் மீது வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "சடக் 2 போஸ்டரில் கயிலை மலையின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வருகிற எட்டாம் தேதி நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details