லாஸ் ஏஞ்சலிஸ்: 'கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்ஸ்' படத்தில், சிறிய வேடத்தில் தோன்றிய நடிகை மோலி ஃபிட்ஸ்ஜெரால்டை, அமெரிக்காவின் கன்சாஸ் மாகணத்திலுள்ள ஓலாதி நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஓலாதி நகர காவல் துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், "ஆயுதம் வைத்து தனக்கு மிரட்டல் வருவதாக நடிகை மோலியின் தாயார் பாட்ரிசியா இ ஃப்ட்ஸ்ஜெரால்ட் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, 38 வயதாகும் பெண்மனி ஒருவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும் சிறிய காயங்களுடன் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றார் எனவும் தெரியவந்தது.
தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட நாங்கள், இறந்த பாட்ரிசியாவின் மகளும், நடிகையுமான மோலி ஃபிட்ஸ் ஜெரால்டை கைது செய்தோம். இவர் மீது செகண்ட்-டிகிரி கொலை வழக்கு (முன்கூட்டியே திட்டமிடவில்லையென்றாலும், கோபத்தால் கொலை செய்தல்) பதிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2011இல் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்ஸ்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோலி ஃபிட்ஸ்ஜெரால்ட். மேலும், அந்தப் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார்.