சினிமா இயக்குநரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகரின் 70ஆவது படமாகவும், நடிகர் ஜெய்யின் 25ஆவது படமாகவும் ‘கேப்மாரி’ உருவாகியது. அதுல்யா ரவி, வைபவி ஷாண்டில்யா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சத்யன், பிரியதர்ஷ்னி, பவர்ஸ்டார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘இத’ பிரிச்சி பார்த்தா லைஃபே வேஸ்ட்டு - என்ன சொல்கிறது ‘கேப்மாரி’ ட்ரெய்லர்? - கேப்மாரி டிரெய்லர்
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 70ஆவது படமான கேப்மாரியின் ட்ரெய்லரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
Capmaari movie trailer
இந்தப் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இன்று வெளியிட்டார். ட்ரெய்லர் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்களாக நிரம்பி வழிகின்றன. இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சித்விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.