அமெரிக்காவில் உள்ள கேன்ஸஸ் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த குறும்படத்திற்கான விருதை அபிலேஷ் இயக்கிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் பெற்றிருக்கிறது.
இப்படத்தின் இயக்குநர் அபிலேஷ் குறும்படத்தை இயக்கிய அனுபவத்தையும், விருது வென்றதையும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.
செந்த ஊர் நெய்வேலி. படிப்பதற்காக சென்னை வந்தேன். படித்துக் கொண்டிருக்கும்போதே ஃபேஷன் புகைப்படக்காரராக இருந்தேன். அதன்பின் ‘புலி’ படத்தில் மேக்கிங்கில் பணியாற்றினேன். பிறகு ‘மெர்சல்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன்.
ஒருநாள் இக்குறும்படத்தின் ஒரு வரி மனதில் தோன்றியது. உடனே இப்படத்திற்கான பணிகளை தொடங்கினோம். மொத்தமாக 48 மணி நேரத்திலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம். குறைந்த நேரத்தில் இப்படம் எடுக்க சவாலாக இருந்தது நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பு தான்.
ஆனால், அவர்கள் எந்த தயக்கமும் காட்டாமல் குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படத்தில் கதாநாயனும் கிடையாது, வில்லனும் கிடையாது. புதிய கோணத்தில் இப்படம் அமைந்திருக்கும்.
விருது வெல்ல வேண்டும் என்ற நேக்கில் இப்படத்தை இயக்கவில்லை. இவ்விழாவில் 104 நாடுகளிலிருந்து 1400 குறும்படங்கள் பங்கு பெற்றன. அதில் இருந்து ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை வென்றது. , சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவிற்கு அதுவும் தமிழ் படத்திற்கு விருது கிடைத்துள்ளது என்ற செய்தி கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்தேன்.
குடும்பத்தினருடன் அபிலேஷ் அடுத்ததாக ஒரு ஒரு படத்தை வெள்ளித்திரையில் இயக்க உள்ளேன். அதற்கான கதை 75 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளேன் என்றார்.